fbpx
Others

பிரதமர் மோடிமக்களவையில் செங்கோலை நிறுவினார் …

லைவ் அப்டேட்ஸ்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறப்பு; மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி...!

காலை 7.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சிதொடங்கியது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு!

. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தமிழக மறைகள் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். முன்னதாக செங்கோல் முன் பிரதமர் மோடி தரையில் விழுந்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர். செங்கோலை வைத்த பின்னர் ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.:
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோல் முன் பிரதமர் மோடி தரையில் விழுந்து வணங்கினார்.நாடாளுமன்ற திறப்பில் அனைத்து மத பிரார்த்தனை..!
28 மே 2023 8:15 AM நாடாளுமன்ற திறப்பில் அனைத்து மத பிரார்த்தனை..! புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. சங்கராச்சாயார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்று அனைத்து மத பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

undefinedபுதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கல்வெட்டை பிரதமர்மோடி திறந்து வைத்தார்

நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.கட்டுமானத் தொழிலாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி..! கட்டுமானப்பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார். அதனை தொடர்ந்து வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close