fbpx
HealthTamil Newsஉணவு

தெரிந்துக் கொள்வோம்…வாழைப்பழத்தின் வகைகளும் பயன்களும் !

பூவன் பழம்: அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.

பேயன் பழம்: வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.

மலைப்பழம் (பச்சைப் பழம்): குழந்தைகளின் வெரைட்டி. இரத்த விருத்தி செய்யும்.

ரஸ்தாளி: மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மாந்தன்: உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.

நேந்திரம்பழம்: பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.

கற்பூரவள்ளி: வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.

செவ்வாழை: நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும்.

கதளி: (பூவன் பழத்தின் ரகம்): ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.

எலைச்சி: சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.

கேவென்டிஷ்: ஏற்றுமதி ரக வாழை; பளபள மஞ்சள் நிறமும்; மிக நீண்ட நாள் கெடாத தன்மையும் கொண்டது. இந்த வகையைச் சுற்றி பல சர்ச்சைகள் உண்டு.

Related Articles

Back to top button
Close
Close