fbpx
Others

தமிழக ஊரக வளர்ச்சி துறை–காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்.. கலெக்டர்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங்  கொடுத்த உயர் நீதிமன்றம் | Chennai High court warns District Collectors over  flag pole case - Tamil ...சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. எல்லா கட்சிகளும் ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்கின்றன. இதற்காக பிளக்ஸ் பேனர் வைப்பது, கொடி கம்பங்கள் ஊண்டுவது, சாலைகளில் தற்காலிகமாக கம்பங்கள் நிறுவ கொடிகளை நடுவது, சுவரொட்டி ஒட்டுவது, ரோடு ஷோ செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, வீடு வீடாக செல்வது என பல்வேறுவழிகளில்பிரச்சாரத்தைகையில்எடுத்துவிட்டன.இதில்கொடிகம்பம்தொடர்பானவிதிமுறைகள்வெளியிடப்பட்டுள்ளது.தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரங்களை பார்ப்போம். * தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். * தற்காலிக கொடி கம்பங்களின் எண்ணிக்கை, கொடி கம்பம் மற்றும் கொடிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.* கொடி கம்பங்களுக்கு இடையிலான இடைவெளி, கொடி கம்பங்கள் நிறுவப்படும் இடம் மற்றும் பகுதியை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். * தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க, நிகழ்வுக்கு முந்தைய நாள், நிகழ்வின் நாள் மற்றும் அதன் பிந்தைய நாள் என, மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.* சாலை கட்டமைப்புகளின் மீது, அதாவது மைய நடைபாதை, வடிகால், பாலங்கள் மீது தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.* தற்காலிக கொடி கம்பத்தின் அதிகபட்ச உயரம், தரைமட்டத்தில் இருந்து 3.50 மீட்டராக இருக்க வேண்டும். * மின்சாரம் தாக்குவதை தடுக்க, கொடி கம்பத்தின் மேல்முனையை, பொருத்தமான காப்பு பொருட்களால் மூட வேண்டும். * ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், கொடி கம்பங்களை அமைத்தவர்களே முழுப்பொறுப்பு. விபத்து நடந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். * தற்காலிகமாக கொடி கம்பங்களை நிறுவுவதற்கு கட்டணம் உண்டு. * தற்காலிக கொடி கம்பங்களை, அனுமதி காலம் முடிந்தவுடன் அமைப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும்.* சாலை தடுப்பு மையம் மற்றும் பிற தடை செய்யப்பட பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்கள் வைத்தால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக, காவல் துறை வாயிலாக வழக்குபதிவு செய்ய வேண்டும் ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close