RETamil News
மூன்று முதலைகள் சென்னை ஏரியில் மிதந்து சென்ற காட்சி – அச்சத்தில் மக்கள்

சென்னைக்கு அருகே உள்ள ஏரி ஒன்றில் மூன்று முதலைகள் மிதந்து செல்வதை அங்கிருந்த மக்கள் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது தொடர்பான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் போட்டு பீதியை கிளப்பி வருகின்றது.
தாம்பரம் அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா பின்புறம் ஓடும் ஒரு ஏரியின் அருகே பல குடியிருப்புகள் உள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் அந்த எரியும் தண்ணீரைத்தான் குடிக்கவும், மற்றும் இதர சில வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
தற்போது அந்த ஏரியில் மூன்று முதலைகள் மிதந்து செல்வதை பார்த்த மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளனர்.எனவே அந்த முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















