fbpx
RETamil News

மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி – விவசாயிகள் போராட்டம்

சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீர் சாகுபடி இல்லாமல் காய்ந்து வருவதால் நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாகுபடி செய்த பயிரை பாதுகாப்பதற்காக வேறு வழியில்லாமல் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் நாள்தோறும் அதிக அளவில் செலவாகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பயிர்கள் பாசனத்திற்கு விடும் நீரின் அளவை 20 ஆயிரம் கன அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணத்தை அடுத்து ஏராஹாரம் கிராமத்தில் விவசாயிகள் வயலுக்குள் நின்று டீசல் கேன்களுடன் , கருப்பு கோடி ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் காவேரி பாசன பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளரும் பங்கேற்றார்.

 

 

Related Articles

Back to top button
Close
Close