fbpx
Others

நீடாமங்கலம்–உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு —-சிறப்பு செய்தி

உலக ஓசோன் தினம் விழிப்புணர்வுநீடாமங்கலம் செப்16-உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓசோன் படல பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தேவிலட்சுமி தலைமையில் நடைபெற்றது . நிகழ்வில் ஓசோன் படலம் என்பது பூமியின் வளி அடுக்கு மண்டலத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு கவசம் என்றும், சூரியனிடமிருந்து வருகின்ற புற ஊதா கதிர்களை உறிஞ்சி பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கின்றது. புவி பரப்பிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து 30 கிலோமீட்டர் உயரம் வரை வாயுக்களாக இந்த ஓசோன் படலம் பரவி உள்ளது என்றும், . பூமியிலிருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் ,நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோஃபுளோரோ கார்பன், உள்ளிட்டவை ஓசோன் படலத்தை பாதித்து ஓசோன் படல மெலிவை ஏற்படுத்தி புவி வெப்பமயமாதல் நிகழ்வு நடைபெற காரணமாக உள்ளது. நெகிழிப்பைகளை தவிர்ப்பதும் ,மரங்களை அதிக அளவில் வளர்ப்பதுமே ஓசோனை பாதுகாக்கின்ற முக்கிய வழிகளாகும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் தங்களால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட்டு ஓசோன் படலத்தையும், பல்லுயிர்களையும் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தார் .மாணவர்கள் நெகிழியை தவிர்ப்போம், மாசுபாட்டை குறைப்போம், மரங்களை வளர்ப்போம், புவி வெப்பமயமாதலை தடுப்போம் என்ற உறுதிமொழிகளை கூறி பள்ளிக்கு அருகில் விழிப்புணர்வு செய்தனர். நிகழ்வின் முன்னதாக ஆசிரியை சிங்கார கஸ்தூரி பாய் வரவேற்றார் .ஆசிரியர் திராவிட மணி நன்றியுரை ஆற்றினார்

Related Articles

Back to top button
Close
Close