fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், அதிகாலை வீடுகளில் உள்ள பழைய துணிகள், பாய், துடைப்பம் போன்றவற்றை தீயிட்டு எரிப்பார்கள். ஆனால், டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டு தீயிட்டு எரிப்பதால், கரும்புகை மூட்டம் ஏற்படுகிறது. சுற்றுச் சூழலும் பாதிக்கிறது. மேலும், சுவாச கோளாறு, கண் எரிச்சல், இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது. மேலும், நச்சுக்காற்று, கரிப்புகை கலந்த பனிமூட்டம் ஆகியவற்றால் விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. புகைமூட்டத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை தடுக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், விழிப்புணர்வு பிரசாரம் செய்தது.

 

கடந்த 10-ம் தேதி முதல் ஆட்டோ, வேன்களில் ஒலி பெருக்கியை கட்டி வீதி, வீதியாக சென்று போகியன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என்றும், புகையில்லா போகி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்தனர்.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த ஆண்டு போகி பண்டிகையுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து காணப்பட்டது. காற்று மாசு குறைந்ததற்கு காரணம் பொதுமக்களிடையே இருந்த விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் தான் என்று தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close