fbpx
Others

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவா…?

arvind kejriwal delhi delhi assembly election 2024 2024    டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ராஜினாமா செய்கிறார். முன்னதாக டெல்லியில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வர் ஒருமனதாகதேர்ந்தெடுக்கப்படுகிறார். டெல்லி புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில் மூத்த அமைச்சர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் நிபந்தனைகளாக முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் நேற்று முன் தினம் ஆம் ஆத்மிகட்சிநிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், செப்டம்பர் 17-ந் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். டெல்லி புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில் மூத்த அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால், கோபால் ராய் உள்ளிட்டோர் இடம்பிடித்திருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர் மாலை 4.30 மணிக்கு துணை நிலை ஆளுநரை சந்தித்து தமது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்குவார். அப்போது சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கப்படும். இதனை ஆளுநர் ஏற்க மறுக்கும் நிலையில் புதிய முதல்வர் தேர்வு குறித்த முடிவு அவரிடம் தெரிவிக்கப்படும். இதன் பின்னர் புதிய முதல்வர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவரங்கள் வெளியாகும்.

Related Articles

Back to top button
Close
Close