fbpx
Others

திருவண்ணாமலை–தத்தனூர் ஆர்.சி.எம் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தத்தனூர் ஆர்.சி.எம் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது,
விழாவில் தாளாளர் தந்தை மதிப்பிற்குரிய ஜான் ராபர்ட் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, ஊர் பிரமுகர் பெரியநாயகம், தன்னால்வலர் உமா மகேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் உணவு இனிப்பு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close