மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். உடல் அடக்க நேரம் நெருங்கும் நிலையில் பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறினர். நல்லடக்க நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பங்காரு அடிகளாரின் உடல் புற்றுக் கோயில் மண்டபத்தில் சிந்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன் பங்கேற்றனர். பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்