Others
மேற்கு மாவட்ட பா.ஜ.க. புழல் மண்டல் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழா.
சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. புழல் மண்டல் சார்பாக பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மண்டல் தலைவர்.ரஜினி தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.முன்னதாக பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் புழல் மண்டல் முழுதும் உள்ள ஊராட்சி பகுதியில் நிர்வாகிகள் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.