ChennaiGeneralRETrending Nowதமிழ்நாடு
ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு..! 14 வயது சிறுவன் மிரட்டல்..!
14 year old boy threatens rajini

சென்னை:
நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்பதை போலீஸ் கண்டறிந்தனர்.
நேற்று 108 என்ற அவசர எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். விசாரணையில் அந்த தகவல் புரளி என்பது தெரிந்தது. 108க்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியது கடலூரை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரிந்தது.
8ம் வகுப்பு மாணவனான அந்த சிறுவன் மனநலம் பாதித்தவர் என்று தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து போலீஸார் சிறுவனின் பெற்றோரிடம் அறிவுரை கூறி இருக்கின்றனர்.
















