நீட் (NEET) தேர்வு முறைகேடு சர்ச்சை மற்றும் சிபிஎஸ்இ (CBSE) டிஜிட்டல் மதிப்பெண் குறைபாடுகள் ஆகிய விவகாரங்களுக்குப் பிறகு, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் நாட்டின் புதிய நிதி அமைச்சராக இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்கலாம் என்ற யூகங்களும் வலுவாக எழுந்துள்ளன.பாஜகவின் புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய உட்கட்சி நிர்வாகக் குழு அறிவிக்கப்படும் அதே நேரத்தில், இந்த மத்திய அமைச்சரவை மாற்றமும் நிகழக்கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவுமற்றும்தேர்வுமுறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மாணவர் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கல்வி அமைச்சர்தர்மேந்திரபிரதான்உடனடியாகபதவிவிலகவேண்டும்என்றுடெல்லிஜந்தர்மந்தர்உள்ளிட்டஇடங்களில்தொடர்போராட்டங்களைநடத்திவருகின்றன.பாஜக மேலிடம் இந்த விவகாரத்தில் பெரும் தர்மசங்கடத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த (Damage Control), தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கல்வி அமைச்சகத்தின் புதிய பொறுப்பாளராக நியமிக்க மோடி அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.இருப்பினும் தர்மேந்திரபிரதானிடமிருந்து உடனடியாக கல்வித்துறையைப் பறித்தால், அது எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு அரசு பணிந்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் ஒரு தரப்பினரிடம் உள்ளது.ஒருவேளை நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டால், நாட்டின் மிக முக்கிய துறையான நிதி அமைச்சகத்தை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்திற்குத்தான்69வயதானமுன்னாள்ஐஏஎஸ்அதிகாரியும்,ஆர்பிஐமுன்னாள்ஆளுநருமான சக்திகாந்ததாஸின்பெயர்பலமாகஅடிபடுகிறது.பட்ஜெட்அனுபவம்: சக்திகாந்த தாஸ் இதற்கு முன்பு மத்திய அரசின் 8 பட்ஜெட்டுகளைத் தயாரித்த அனுபவம் வாய்ந்தவர். பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரி முதலீடுகளில் இவருக்கு இருக்கும் ஆழமான நிபுணத்துவம் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்குப் பெரிதும் உதவும் என அரசு நம்புகிறது.எலைட் கிளப் (Elite Club): சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றால், ஆர்பிஐ ஆளுநராக இருந்து நாட்டின் நிதி அமைச்சரான சி.டி.தேஷ்முக் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரின் வரிசையில் இணைவார்.மாநிலங்களவை வாய்ப்பு: தற்போது அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் உறுப்பினராக இல்லை. எனினும் வரும் நவம்பர் 2026-ல் உத்திரப்பிரதேச மாநிலத்தில் காலியாகும் 10 மாநிலங்களவை (Rajya Sabha)இடங்களில் ஒன்றின் மூலம் அவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மோடி
அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் அல்லது அவர்கள்கட்சிப்பணிகளுக்குத்திருப்பப்படலாம்.மனோஹர் லால் கட்டர் மற்றும் ரவ்நீத் சிங் பிட்டு: இவர்களுக்கு வரவிருக்கும் பஞ்சாப் மற்றும் பிற மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு கட்சி ரீதியானபொறுப்புகள்வழங்கப்படலாம். ‘ஒரு நபருக்கு ஒரு பதவி’ என்ற விதியின் கீழ் மாற்றங்கள் வரலாம்.நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி: இவர்களின் தற்போதைய துறைகளின் பணிச்சுமை குறைக்கப்படலாம் அல்லது மாற்றி அமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஹர்தீப் சிங் பூரிக்கு பதிலாக வேறொரு சீக்கிய முகத்திற்குப் பெட்ரோலிய அமைச்சகம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.இந்த ஒட்டுமொத்த அமைச்சரவை மாற்றத்திலும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) விருப்பங்களும், ஆலோசனைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இடையே நடந்த உயர்மட்டக் கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், சாதிய மற்றும் மாநில அரசியல் சமன்பாடுகளைச் சரியாகக் கையாள்வதே இந்த மாற்றத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும்.இவை அனைத்தும் தற்போதைக்கு அரசியல் வட்டார யூகங்களாக இருந்தாலும், இவை நிஜமாகும் பட்சத்தில் மோடி 3.0 அமைச்சரவையின் ஒட்டுமொத்த வடிவமும், அரசாங்கத்தின் பிம்பமும் கணிசமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
| ராகவ் சதா / அனுராக் தாக்கூர் |
பஞ்சாப் தேர்தலைக் குறிவைத்து சில சமன்பாடுகளும், முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூரின் மறுபிரவேசமும் எதிர்பார்க்கப்படுகிறது. |
| சாத்தியமான புதிய அமைச்சர்கள் யார்? |
பின்னணி / அரசியல் முக்கியத்துவம் |
| நிதிஷ் குமார் (JDU) |
பீகார் அரசியலில் செல்வாக்கு மிக்க ஜேடியூ கட்சியின் மூத்த தலைவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியப் பங்கு தரப்படலாம். |
| ஸ்ரீகாந்த் ஷிண்டே (Shiv Sena) |
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) எம்பிக்களை என்டிஏ கூட்டணிக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர். |
| சுகேந்து சேகர் ராய் |
டிஎம்சியில் இருந்து விலகி என்சிபிஐ (NCPI) கட்சியில் இணைந்த இவருக்கு வங்காள அரசியல் சமன்பாட்டிற்காக இடம் கிடைக்கலாம். |