fbpx
Others

ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்த முதல்நாளே இந்த உத்தரவு….

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலாளராக ராஜகோபால் சுன்கரா மற்றும் கூட்டுறவு மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் கடந்த 3 மாதங்களாகஐஏஎஸ்அதிகாரிகள்தொடர்ச்சியாகஇடமாற்றம்செய்யப்பட்டுவருகின்றனர்  ஜூன் மாதத்தில் மட்டும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்பின் ஜூலை மாதம் தொடக்கத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜூலை மாதத்தின் கடைசி நாளான இன்று மீண்டும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா, நில அளவைத்துறை இயக்குநராக தீபக் ஜேக்கப், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி, கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராகசமீரன்நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரன், வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலா, கோவை வணிக வரி இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சென்னை வணிக வரி இணை ஆணையராக நாராயண சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நலம் காரணமாக ஓய்வில் இருந்த வெளியாகி இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close