fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

இவரால் தான் சாத்தியமானது சமூக நீதி…! வாழ்த்தி டுவீட் போட்ட கமல்ஹாசன்!!

Kamalhaasan tweet about karunaniti birthday

சென்னை:

சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கருணாநிதி என்று அவரது பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவீட் போட்டு உள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மரியாதை செலுத்தி போற்றினர்.

இந்நிலையில் கருணாநிதி பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் வாழ்த்தை பதிவிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவர் தமது பதிவில் கூறி இருப்பதாவது:

பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர் என்று கூறியுள்ளார்.

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close