fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா பரிசோதனை கட்டணம்..! தனியார் மருத்துவனைகளில் குறைப்பு…!

Corona test fees less says minister vijayabaskar

சென்னை:

தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

43 கொரோனா பரிசோதனை கூடங்கள் அரசு சார்பில் உள்ளன. அதே போல, தனியார் சார்பில் 29 பரிசோதனை கூடங்களும் இருக்கின்றன. அரசு பரிசோதனை கூடங்களில் இலவசம்.

ஆனால் தனியார் பரிசோதனை கூடங்களில் ஐசிஎம்ஆர் அறிவித்தபடி ரூ.4500  வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என்று பலர் கோரினர். இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்துடன் விவாதிக்கபட்டு, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இனி தனியார் பரிசோதனை கூடங்களில் ரூ.3 ஆயிரம் மட்டுமே கொரோனா பரிசோதனைக்காக வசூலிக்கப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close