குளிர்,பனி குறைந்து , வெயில் கூடும் காலம் !

சென்னையில் தற்போது பனிமூட்டம் குறைய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் வட கிழக்கு பருவமழை பொய்த்து விட்டது.அதற்கு பதிலாக கடுமையான குளிர் ,பனிக்காலம் துவங்கியது.நவம்பர் 3-ஆம் வாரத்தில் துவங்கிய பனி , 50 நாட்களுக்கும் மேல் நீடிக்கிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கான முன் அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் வரும் நாட்களில் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வெப்ப நிலை உயரும் என்றும், பகலில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , வரும் ஐந்து நாட்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகலில் வெப்பநிலை படிப்படியாக கூடும் என்றும், இரவிலும், அதிகாலையிலும் மூடுபனி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் தற்போது அந்த பணியும் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி மாநிலத்தின் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை. எனவே தற்போது நள்ளிரவிலும், அதிகாலையிலும் பொழியும் பனி படிப்படியாக குறைந்து அதுவும் இல்லாமல் வெயில் தொடங்க ஆரம்பித்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.















