கொரோனா தடுப்பு பணி: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் !!

சென்னை:
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் போலீஸ் அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் 906 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், சென்னையில் அறிகுறி இன்றி கொரோனா பரவி வருவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தவிர இந்த பணிக்கு உதவ மண்டல வாரியாக ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு;
வடக்கு மண்டலத்திற்கு மகேஷ்குமார் அகர்வால்,
கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமார்,
தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரி,
மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங்,
சென்னை புறநகர் பகுதிக்கு புவனேஸ்வரி
ஆகியோர் ராதாகிரிஷ்ணன் அவர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.















