பாரத் சிலம்பம் பெடேஷன்—சிறப்பு செய்தி

பாரத் சிலம்பம் பெடேஷன் சார்பில் வருகின்ற ஜூலை மாதம் 17, 18, 19 தேதிகளில் திருவண்ணா மலையில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என பெடரேஷன் நிறுவன தலைவர். முத்துராமன் ஜி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர். மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்களை நேரில் அழைத்த போது எடுத்த படம்.இந்த தேசிய போட்டிக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அவர்களும் வருவதாக முத்துராமன் ஜி தெரிவித்தார்.மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்கள் நிச்சயமாக கலந்து கொள்வதற்கு முயற்சி செய்கிறேன் என்றுகூறினார்.மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பிரிவுகளாக சிதறி கிடக்கும் சிலம்ப அமைப்புகளை ஒருங்கிணைத்து சிறந்த முறையில் மாணவ, மாணவிகளுக்கு பயன் தரும் அளவில் சிலம்பத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய தலைவர். முத்துராமன் ஜி அமைச்சரிடம் தெரிவித்தார்.