fbpx
Others

மதுரையில் சீமான் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்றமாநாட்டை நடத்தினார்.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்திய சீமான்.. மாடுகள் முன்பு எழுச்சியுரை! இதுதான் முதன்முறைநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நிலையை பார்க்கும் போது பரிதாபமாக இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சீமானின்ஆடு,மாடுகள் மாநாட்டைபார்த்துமக்கள்சிரித்துகொண்டிருப்பதாககூறிய  சிவசங்கர்,சீமான்தனதுகடைசிகட்டத்தைநெருங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைமையில் ஆடு, மாநாடுகள் மாநாட்டை நடத்தினார். இதில் ஆடுகள், எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், செம்மறி ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே ஆடு, மாடுகள் முன்னிலையில் சீமான் பேசிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகி வருகிறது.இதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் சிவசங்கர், சீமானின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். அரியலூரில் ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் Sivasankar dmk seeman ntk edappadi palanisamyஅமைச்சர் சிவசங்கர் பங்கேற்று தொடங்கி வைத்தார். சிவசங்கர் பேட்டி இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் சுற்றுப்பயணத்தில் முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்து பேச தொடங்கி இருக்கிறார். அவரின் கருத்தை அவரே திரித்துப் பேசுகிறார். தாம் பேசியதையே வேறு யாரோ கண், காது, மூக்கு வைத்து திரித்துப் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பாஜகவின் கொள்கைகள் பாஜக எடப்பாடி பழனிசாமி தோளில் ஏறி அமர்ந்து கொண்டு, பாஜகவின் கொள்கைகளை பழனிசாமி பேசும் சூழலுக்கு தள்ளி இருக்கிறது. இதனால் பாஜகவின் சுமையின் வலி தாங்க முடியாமல் இவ்வாறு பேசுகிறார். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருப்பதைப் பார்த்து விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டார் என்று தெரிவித்தார்.தொடர்ந்து சீமானின் ஆடு, மாடுகள் மாநாடு தொடர்பான கேள்விக்கு, சீமானின் நிலை இப்படி ஆகிவிட்டது என்பதை நினைக்கும் போது, பரிதாபமாக இருக்கிறது. சீமான் மனிதனையே மனிதனாக நினைத்துப் பேச மாட்டார். மாடுகளாக நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக மதுரையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சீமானுக்கு விரைவில் முடிவு அவரது உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில், அந்த காட்சிகளை தமிழக மக்கள் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சீமான் மீண்டும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close