வேதா இல்லம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! என்ன தெரியுமா?
Tamilnadu government new announcement about veda illam

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பது கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் வேண்டுகோள் ஆகும்.
அதையேற்று அதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. இந் நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியில் தமிழக அரசு தற்போது தீவிரம் காட்டியுள்ளது. ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு கூறி இருக்கிறது.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதேபோன்று வேதா இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு டிடிவி தினகரனும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















