RETamil Newsதமிழ்நாடு

இந்திய மக்கள் தொகை 8000 கோடி! Y.G.மகேந்திரன் மகள் அறிய கண்டுபிடிப்பு!!

சென்னை:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்தின் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு  ஆதரவாக பேசிய Y.G. மகேந்திரன் மகள் என அறியப்படும் மதுவந்தி என்பவர்,

9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றும் சமயம் 9 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக வானியல் வல்லுநர்கள்  சொல்கிறார்கள். அதன் மூலம் கொரோனாவின் சக்தி அழிந்து விடும் என புரூடாவிட்டார்.

இதையே தமிழகம் தாங்காமல் இருக்கும் நிலையில்  மதுவந்தியின் இன்னும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை  அவர்களது வங்கிக் கணக்கில் மோடி செலுத்தியிருப்பதாக (ஆதாரப்பூர்வமாக!!!!)தெரிவித்துள்ளார் இந்த மதுவந்தி.

தான் சொல்லும் தகவல்களுக்கு ஆதாரமாக பிரபல நாளிதழையும் சுட்டிக்காட்டுவதுதான் கொடுமையின் உச்சம்.

மதுவந்தியின் இந்த பேச்சை கேட்ட தமிழர்கள் அனைவரும் வாயடைத்து திகைத்து போயுள்ளனர்.

இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி தான். உலகம் முழுக்க மக்கள் தொகையை கூட்டினால் கூட 800 கோடிதான் வரும்.

மதுவந்தி சொல்வது போல் 8000 கோடி பேருக்கு 5000 கோடி என்றால் ஒரு ஆளுக்கு 62 பைசாதான் வரும், முழுசாக  ஒரு ரூபாய் கூட வராது.

மேலும் அவர் பேசிய வீடியோவில் 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்று உளறுகிறார்.

அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு மோடி அனுப்பிவிட்டதாக பெருமை பட்டுக்கொள்கிறார்..

மதுவந்தியின் இந்த பேச்சை கேட்டு கடுப்பான சில நெட்டிசன்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதீர்கள் எனவும்,

இது ஒரு மனநோய் விரைவாக டாக்டரை பார்க்கவும் என்று அறிவுரையும்  வழங்கி வருகின்றனர்.

சில நெட்டிசன் கள் துக்ளக் படிப்பதால் தான் இவருக்கு மூளை அதிகப்படியாக வேலை செய்கிறது என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இப்பொழுது இதற்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்ற பெயரில் இன்னும் ஒரு விடியோ வைரல் ஆகி வருகிறது..

Related Articles

Back to top button
Close
Close