fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

ஒரேயொரு அரசாணை…! தமிழக அரசை பாராட்டும் திருமாவளவன்!

Thirumavalavan twitter message

சென்னை:

தமிழக அரசின் அரசாணை ஒன்றிற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல ஊர்கள் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பலதரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. அதன் ஒரு கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இது வரவேற்கத் தக்கது. தமிழக அரசுக்கு எமது பாராட்டுகள். நன்றி. ADAYAR( அடையார்) என எழுதுவதை இனியாவது ADAIYAARU (அடையாறு)எனவும் PALAR(பாலார்) என எழுதுவதை PAALAARU( பாலாறு) எனவும் எழுதட்டும். Portonovo என்பதை PARANGIPETTAI (பரங்கிப்பேட்டை) என்றே ஆங்கிலத்திலும் எழுதட்டும்  என்று கூறியுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close