fbpx
Others

சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக பின்பற்றாதது மக்கள் மத்தியில் வேதனை……?

தமிழக சட்டமன்றத்தில் நடந்த சிறப்புக்கூட்டங்களும்.. நிறைவேற்றப்பட்ட  மசோதாக்களும்.. விவரம்! | Details of the Special Session of the Tamil Nadu  Legislative Assembly convened ...கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தமாக 161 நாட்கள் நடைபெற்றுள்ளது. சட்டமன்றம் என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடி மக்களின் பிரச்சினைகளை விவாதித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் ஒரு மன்றம்.    மொத்தம் 234 உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாட்டில், கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 161 நாட்கள் மட்டுமே நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் வந்த உறுப்பினர்களின் ( எம்எல்ஏ) பட்டியல் வெளியாகியுள்ளது. 1. வி. அமலு – குடியாத்தம் ( திமுக)   2. அரவிந்த் ரமேஷ் – சோழிங்கநல்லூர் ( திமுக)     3. வி ஜி கஜேந்திரன் – திருவள்ளூர் ( திமுக)    4. ஆர். இளங்கோ – அரவக்குறிச்சி ( திமுக)     5. ஈ.ஆர்.ஈஸ்வரன் – திருச்செங்கோடு ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)     6. உதயசூரியன் – சங்கராபுரம் ( திமுக)    7. ஜெ.ஜெ. எபினேசர் – ஆர்கே நகர் ( திமுக) 8. 8. இ. கருணாநிதி – பல்லாவரம் (திமுக)    9. எஸ்.சுதர்சனன் – மாதவரம் ( திமுக)  10. கே.சுந்தர் – உத்திரமேரூர் ( திமுக)    11.வி.சி.சந்திரகுமார் – ஈரோடு கிழக்கு ( திமுக)    12. பிரபாகர்ராஜா –  விருகம்பாக்கம் ( திமுக)    13. ஜெ.ஜெ.பிரின்ஸ் – குளச்சல் ( காங்கிரஸ்)  14.ஜிவி மார்க்கண்டேயன் – விளாத்திக்குளம் ( திமுக)   15. முகமது ஷாநவாஸ் – நாகப்பட்டினம்(விசிக)  16. வி.முத்துராஜா – புதுக்கோட்டை ( திமுக) 17. பி.ராமலிங்கம் – நாமக்கல் ( திமுக)   18. ஜோசப் சாமுவேல் – அம்பத்தூர் ( திமுக)            அப்படினா எதிர்க்கட்சி எப்படி?     தமிழ்நாட்டில் மொத்தம் 234எம்எல்ஏக்கள்பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டு சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் 18 பேர் மட்டுமே சட்டமன்றம் நடைபெற்ற 161 நாட்களும் தவறாமல் பங்கேற்றுள்ளனர். மற்றவர்கள் உடல்நலக்குறைவு,அரசுவிழாக்கள்மற்றும்தனிப்பட்டகாரணங்களால்சட்டசபைக்குச்செல்ல  வில்லை.  சட்டசபைக் கூட்டத் தொடரில் 100 சதவீதம் வருகைப்பதிவு வைத்துள்ள 18 எம்எல்ஏ -க்களில் 15 பேர் திமுக-வைச் சேர்ந்தவர்கள். ஒருவர் விசிக-வையும், ஒருவர் காங்கிரசையும், ஒருவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியையும் சேர்ந்தவர்கள்.  எதிர்க்கட்சியான அதிமுக – பாஜக கூட்டணியில் ஒருவர்கூட 100 சதவீத வருகையை பதிவுசெய்யவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் தொகுதி கோரிக்கைள எழுப்பும் வகையில் நேரம் ஒதுக்கி வழங்கப்படும். இதனால், இந்த கேள்வி பதில் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்த ஒவ்வொரு உறுப்பினரும் ஆர்வம் காட்டுவார்கள். இதுபோன்று முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 100 சதவீதம் வருகையை உறுப்பினர்கள் முறையாக பின்பற்றாதது மக்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close