Others
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிபயணமும்– முதலீடும்,வேலைவாய்ப்பும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 3 ஜெர்மனி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம், 3,201 கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் 6,250 பேருக்கு வேலை வாய்ப்புகிடைக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், நேற்று அந்நாட்டின் கலோன் (Cologne) நகரில் அயலகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று தமிழ்நாடும் வளர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் உங்களால் முடிந்த உதவிகளை உங்கள் தாய் மண்ணுக்கு செய்யவேண்டும். நீங்கள் செய்வது சிறிய தொழிலாகஇருந்தாலும்தமிழ்நாட்டில்தொடங்குங்கள்என்றும்கோரிக்கைவிடுத்தார்.இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 3 ஜெர்மனி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம், 3,201 கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் 6,250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ம்யூனிக்கை தலைமையிடமாகக் கொண்ட பிரேக்கிங் சிஸ்டங்களில் உலகளாவிய அளவில் முன்னணி நிறுவனமான நார் ப்ரெம்ஸ், ரயில்வே கதவுகள், பிரேக்கிங் சிஸ்டங்களுக்கான அதிநவீன வசதியை நிறுவ ரூ. 2000 கோடி புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. இது நார்-ப்ரெம்ஸ் தமிழ்நாட்டில் செய்யும் முதல் பெரிய உற்பத்தித்திறன் கொண்ட முதலீடாகும். இந்தத் திட்டம் 3,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.உலகின் முன்னணி காற்றாலை உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெர்மனியை சேர்ந்த நார்டெக்ஸ் குழுமம், ரூ. 1000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, 2,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் முன்னோடியான தமிழ்நாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.ஆற்றல் திறன் கொண்ட மின்சார மோட்டார்கள் மற்றும் காற்றியக்க தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ebm-papst, தமிழ்நாட்டில் அதன் உலகளாவிய திறன் மையம் (GCC) மற்றும் உற்பத்தித் தளம் இரண்டையும் விரிவுபடுத்த இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ரூ. 201 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விரிவாக்கம், HVAC, ஆட்டோமொடிவ் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் 250 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.தமிழ்நாட்டில் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்திய BMW குழுமத்தின் மூத்த தலைவர்களையும் முதலமைச்சர் சந்தித்தார். சந்திப்பின்போது, ஆட்டோமொடிவ் மற்றும் EV துறைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பை முதலமைச்சர் எடுத்துரைத்தார், மேலும் தமிழ்நாட்டின் மூலமாக இந்தியா முழுவதும் தொழிலை விரிவுப்படுத்த BMW நிறுவனத்தை அழைத்தார். தமிழ்நாட்டின் வலுவான EV உள்கட்டமைப்பையும் இந்தியாவில் தங்கள் விற்பனை அனுபவத்தையும் மேற்கோள் காட்டி BMW தமிழ்நாட்டுடன் தொழில் செய்வதை மீண்டும் உறுதிப்படுத்தியது.