fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்

தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா…! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

WHO praises maharashrtra vonerment for dharavi

ஜெனீவா:

தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி. இங்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள்  வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது.

எனினும் மகாராஷ்டிரா அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது.  அதன் பலனமாக,  சில வாரங்களாக  தாராவியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இந் நிலையில், தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. அதன் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ர்யேசுஸ்  இது குறித்து கூறுகையில்,  கடுமையான நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் தாராவி ஆகிய இடங்கள் நமக்கு காட்டியுள்ளன.

உலக அளவில் 6 வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. எனினும், வைரஸ் எவ்வளவு வேகமாக பரவினாலும், தீவிர நடவடிக்கைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற எடுத்துக்காட்டுகளும் கிடைத்துள்ளன என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close