Others
திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயக ரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வேன் 3வது கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்.