fbpx
Others

உதயநிதி ஸ்டாலின்–புதிய விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கானஅடிக்கல்நாட்டும்நிகழ்ச்சி–

udhayanidhi stalin laid foundation stone for sports development in chennai coimbatore and kanyakumari districts தமிழகத்தின் இளைஞர்கள் விளையாட்டு துறையில் தேசிய, சர்வதேச அளவில் சிறந்து விளங்க தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், சென்னை , கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்தம் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கானஅடிக்கல்நாட்டும்நிகழ்ச்சிஇன்று(ஆகஸ்ட்22)நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடிக்கல்நாட்டினார். சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு விடுதி கட்டப்பட உள்ளது. இங்கு 90 மாணவர்கள் தங்கி குத்துச்சண்டை பயிற்சி பெறும்வகையில்விடுதிஅமைக்கப்படும். அதனுடன் உணவருந்தும் கூடம், சமையலறை, உடற்பயிற்சி செய்யும் பகுதி போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டுதொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம்: சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு | A sports stadium for the constituency: Minister Udhayanidhi Stalin announcement in the ... வளாகத்தில் உள்ள பார்வையாளர் மாடம் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச தரத்திலான வசதிகளுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் திறன் அந்த வளாகத்திற்கு கிடைக்கும்..கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்படுகிறது. இதில் 200 மீட்டர் தடகள ஓட்டப்பந்தய (மண்) பாதை, கையந்துபந்து, கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோபோன்றஆடுகளங்கள்,நீளம்தாண்டும்பகுதி,நிர்வாகஅலுவலககட்டிடம்,நுழைவுவாயில்  மற்றும்கழிப்பறைவசதிஆகியவைஅமைக்கப்படுகின்றன.முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழகத்தை விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட விளையாட்டரங்கங்களில் சர்வதேச தரத்திலான வசதிகளை ஏற்படுத்துதல், சிறு விளையாட்டரங்கங்களை அமைத்தல், விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல் போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா (இ.ஆ.ப.), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத் ரெட்டி (இ.ஆ.ப.) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த மூன்று முக்கிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள், தமிழக இளைஞர்களுக்கு விளையாட்டு துறையில் சர்வதேச வெற்றிகளைப் பெற்றுத்தரும் வலுவான தளமாக அமையும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close