தேனி– பெயரளவில் சாலைபணிகள் கோடிகள் சுருட்டல்…?
தேனி மாவட்டம்-மதுரைமூணாறுநெடுஞ்சாலையில் போடி பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தற்போது நெடுஞ்சாலை துறையினர் மூலம் ஒப்பந்தக்காரர்களால் புதியதாக சாலை போடும் பணியை மேற்கொண்டு உள்ளனர், இதற்கு முன் பல இடங்களில் ஒப்பந்தம் பெற்று தேனி மாவட்டத்தில் சாலை பணிகளை மேற்கொண்டு வந்துள்ள வேளையில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு சாலை பணிகள் தரம் மற்றும் அவற்றின் உறுதி தன்மைகள் மிகவும் சரியான அளவீடுகளில் சாலை பணிகளில் நடப்பதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா ? அல்லது அரசியல்வாதிகளின் தலையீடு ஏதும் உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர் ? இதைப்பற்றி ஏதேனும் கேள்விகள் கேட்டால் அரசு அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமலும், பதில் ஏதும் சொல்லாமல் இருந்து வருவது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆதலால் இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையினரும் இணைந்து ஆய்வு செய்து போடப்பட்ட சாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் ???……………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.