Others
தேனி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம்,தேனி நகரில் 29/10/2023 இன்று காலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு அலுவலகமான பாலன் இல்லத்தினை சமூக விரோதிகள் சிலர் தாக்கியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், தேனி தாலுகா செயலாளர் தோழர் அரசகுமாரன் தலைமையில் , தாலுகா துணை செயலாளர் தோழர் கர்ணன், முல்லை முருகன் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கட்சியின் மாவட்ட பொருளாளர் தோழர் M.S.P. ராஜ்குமார், முது பெரும் தோழர் திருமலை கொழுந்து ஆகியோர் மற்றும் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிகழ்ச்சி…………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.