தேனியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா…
தமிழ்நாடுதேனிமாவட்டம் , தேனியில் மாற்றுத்திறனாளிகள் விழா !!! தேனியில் 03.12.2024 இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளையும் , சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கினார். இந்த விழாவில் சமூக ஆர்வலர் சிவாஜி கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் உள்ள உறுதியுடன்,வெற்றியின்உச்சத்தைத்தொடவேண்டும்என்றுவாழ்த்தியநிகழ்ச்சி………….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.