RETamil News

மாஸ்க், சானிடைசர் போன்றவற்றுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும் – ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர்’ பக்கத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று நீண்டநாட்களாக கோரி வருகிறோம்.

ஆனால், ஏற்கனவே வறுமையிலும், நோயிலும் வாடும் மக்களிடம் கொரோனா தடுப்பு உபகரணங்களான கிருமிநாசினி, சோப்பு, கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.

இது தவறானது. அத்தியாவசிய பொருட்களாக மாறி விட்ட இந்த பொருட்களுக்கான  ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும்  என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close