ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
கோவையில், அப்துல்கலாம் பெயரில் அறநெறி மற்றும் அரசியல் மையம், ஆக.,15ல் திறக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கானதன்னார்வலர்களுக்கு,அரசியல்பயிற்சி அளிக்க வேண்டும்அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், நம் தன்னார்வலர்கள் இறங்கி உள்ளனர். தினமும் தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர்.இந்தியா மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதில் தமிழகம் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கில், அனைத்து இனத்தையும், மதத்தையும், ஜாதியையும் இணைத்து, ‘நாம் இந்தியர்கள், நாம் தமிழர்கள்’ என்கிற ஒற்றை கருத்துடன் முன்னெடுக்கிறோம். பிரிட்டனில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் ‘வி தீ லீடர்ஸ்’ அமைப்பில் இணைய விரும்புவோர்,அமைப்பில் இணையுங்கள்.ஜூலை 1 முதல் நம் களப்பணியை தொடங்க உள்ளோம். அந்த மாதம் முழுதும், போதைப் பொருளுக்கு எதிராகவும், ஆகஸ்ட் மாதம் முழுதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், களம் இறங்க உள்ளோம். அரசு மீது பழி போடாமல் களம் இறங்குகிறோம். ஜூலை முதல் வாரத்தில், மொபைல் செயலி வந்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.