fbpx
Others

சென்​னை​யில் கேட்​பாரற்று கிடக்​கும் இருசக்கர வாக​னங்​கள் ஏலம் ….

👮‍♂️ முனைவர் திரு. A.அமல்ராஜ், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர்  அவர்கள் இன்று (22.05.2026) காலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில்  சென்னை ...சென்னையில் கேட்பாரற்று கிடந்த ...சென்​னை​யில் ​கேட்​பாரற்று கிடக்​கும் வாக​னங்களை கண்​டறிந்​து, உரிய​வர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்று காவல் ஆணை​யர் அமல்​ராஜ் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டார்  இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணை​யர்​கள் தலை​மை​யில் போலீ​ஸார் தங்​கள் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் தீவிர சோதனை நடத்​தினர்.அப்​போது, நீண்ட கால​மாக சாலை​யோரம், தெருக்​களில் கேட்​பாரற்று கிடந்த 5,543 வாக​னங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. உரிமை​யாளர்​கள் யாரும் உரிமை கோராத நிலை​யில், இந்த வாக​னங்​களை ஏலத்​தில் விற்​பனை செய்​வதற்​காக அவை சென்னை மாநக​ராட்​சி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.இதில் மாநக​ராட்சி மூலம் மதிப்​பீடு செய்​யப்​பட்ட 1,936 வாக​னங்​கள் நேற்று முதல் மின்​னணு ஏலத்​தில் விடும் பணி தொடங்கி உள்​ளது. மீத​முள்ள 3,607 வாக​னங்​களும் மதிப்​பீடு செய்​யப்​பட்​டு, மின்​னணு ஏலத்​தில் விடு​வதற்​கான நடவடிக்​கை​கள் நடை​பெற்று ​வரு​கின்​றன​.அவற்​றுக்​கான ஏல தேதி​கள் பின்​னர் அறிவிக்​கப்​படும். இதற்​கிடையே, சென்னை காவல் எல்​லைக்​குட்​பட்ட காவல் நிலை​யங்​களில் போதைப்​பொருள் வழக்​கு​களில் கைப்​பற்​றப்​பட்ட 81 இருசக்கர வாக​னங்​கள், 12 மூன்று சக்கர வாக​னங்​கள், 9 இலகுரக வாக​னங்​கள் என மொத்​தம் 102 வாக​னங்​களும் ஏலம் விடப்பட உள்​ளன.இதற்​காக சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றங்​களின் உத்​தர​வு​கள் மற்​றும் வாகன மதிப்​பீடு​கள் பெறப்​பட்​டு, இணை​யதளம்​ மூலம்​ மின்​னணு ஏலம்​ நடத்​து​வதற்​​கான நடவடிக்​கை​கள்​ மேற்​கொள்​ளப்​பட்​டு வரு​கின்​றன

Related Articles

Back to top button
Close
Close