REஇந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் நடத்தபட்ட என்கவுண்டரில் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்ஹர் மாவட்டத்தில் உள்ள ஹுடர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

அந்த தகவலை அடுத்து சி.ஆர்.பி.எப் வீரர்கள், இராணுவம் மற்றும் மாநில போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு பகுதியில் மறைந்திருந்த அந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படை வீரர்களும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பல மணி நேரம் நடந்த இந்த சண்டை என்ற போராட்டத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் மேலும் சில பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close