fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

விசிக தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி கொரோனாவுக்கு பலி….! தொண்டர்கள் அதிர்ச்சி!

VCK leader thirumavalavan sister dead due to corona

சென்னை;

கொரோனா சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி உயிரிழந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான கு.பானுமதி உயிரிழந்தார். 3 வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு இளையராஜா, மாலதி, இசையமுதன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அவரின் இறப்புக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, டிடிவி.தினகரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close