fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலவரம் இதுதான்..! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

India corona patient’s status

டெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:

இன்று காலை 9:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767 ல் இருந்து 1,58,333 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,337 ல் இருந்து 4,531 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,426 ல் இருந்து 67,692 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,110 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

24 மணி நேரத்தில் மட்டும், 6,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close