ChennaiRETamil NewsTrending Now
ராயபுரத்தை ஓவர்டேக் செய்த கோடம்பாக்கம்…! திருவிக நகரும் முன்னேற்றம்..! முழு விவரம்
Chennai corona zone wise list

சென்னை: சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக கோடம்பாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற பகுதிகளை விட சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ராயபுரம் அதிகம் கொரோனா தொற்று கண்ட இடமாக அறிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது ராயபுரத்தை வீழ்த்தி கோடம்பாக்கம், திருவிக நகர் முன்னேற்றம் கண்டுள்ளன. கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா உள்ளது. கோடம்பாக்கத்தை அடுத்து திருவிக நகரில் 448 பேரும், ராயபுரத்தில் 422 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை, அண்ணாநகர், தண்டையார் பேட்டை பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயரும் பாதிப்பால் சுகாதார நடவடிக்கைகள் முன்பை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.















