fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

வாடகைக்கு வேண்டுவோர் கவனத்துக்கு…! அரசு போக்குவரத்து கழகத்தின் அதிரடி அறிவிப்பு!

Bus for rental says tamilnadu transport corporation

சென்னை:

அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் பேருந்து  சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. 5ம் கட்ட ஊரடங்கின்போது தமிழகத்தின் 6 மண்டலங்களில் போக்குவரத்து சேவை தொடங்கியது.

பல மாவட்டங்களில் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயங்க தொடங்கி உள்ளன. ஆனால் பயணிகளிடம் பெரிய வரவேற்பு இல்லை. வசூலும் குறைவாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நிறைய மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

என்ன காரணத்திற்காக பேருந்து தேவைப்படுகிறது? இ பாஸ் அனுமதி இருக்கிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்த பின்னர் பேருந்துகள் வழங்கப்படும்.

மலைப்பகுதிகளில் கிலோமீட்டருக்கு 55 ரூபாயும், தரைப்பகுதிகளில் கிலோமீட்டருக்கு 45 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close