கோவை–We The Leaders அமைப்பு கோரிக்கை.
கோவை மாவட்டம் வால்பாறை–அட்டகட்டி வழித்தடத்தில் மகளிர் இலவச பேருந்து சேவையை அமல்படுத்த வேண்டும் – We The Leaders அமைப்பு கோரிக்கை 
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும்மகளிர்தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, வால்பாறையிலிருந்து அட்டகட்டி வரை இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்டம் வால்பாறை We The Leaders அமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், வால்பாறை பகுதியில் எஸ்டேட்களுக்கு இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் வால்பாறையிலிருந்து புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, ஐயர்பாடி, கவர்க்கல், வாட்டர்பால், காடம்பாறை, அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியாக உள்ளூர் பேருந்து வசதி இல்லாததால்,அந்தப்பகுதிகளில்பணிபுரியும்தேயிலைத்தோட்டமகளிர்தொழிலாளர்கள்அரசின்இலவசபயணத்திட்டத்தின்பயனைமுழுமையாகபெறமுடியாதநிலைஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதிகளுக்கு பெரும்பாலும் வால்பாறை–பொள்ளாச்சி நேரடி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவை விரைவு (Exp) பேருந்துகளாக இயக்கப்படுவதால், மகளிர் இலவச பயணத் திட்டம் நடைமுறையில் இல்லை. இதனால் தினமும் பணிக்குச் செல்லும் மகளிர் தொழிலாளர்கள் கட்டாயமாக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.மேலும், வால்பாறை–பொள்ளாச்சி வழித்தடத்தில் சில பேருந்துகளில் ரூ.64 விரைவு கட்டணமும், சில பேருந்துகளில் ரூ.48 சாதாரண கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இரண்டு வகை பேருந்துகளும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் பொள்ளாச்சியை சென்றடையும் நிலையில், கட்டணத்தில் மட்டும் வேறுபாடுஇருப்பதுபயணிகளிடையேஅதிருப்தியைஏற்படுத்திவருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், வால்பாறை மலைப்பாதையில் அதிக வளைவுகள் இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் அனைத்து இருக்கைகளுக்கும்கைப்பிடிதடுப்புகள்அமைக்கவேண்டும்என்றும்வலியுறுத்தப்பட்டுள்ளது எனவே, வால்பாறை–அட்டகட்டி வழித்தடத்தில் மகளிர் இலவச பேருந்து சேவையை அமல்படுத்தவும், வால்பாறை–பொள்ளாச்சி வழித்தடத்தில் அனைத்து சாதாரண பேருந்துகளுக்கும் ரூ.48 கட்டணத்தை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கவும், அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளில் கைப்பிடி தடுப்புகள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்டம் வால்பாறை We The Leaders அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .செய்தி / புகைப்படம்:
கோவை மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெயபிரகாஷ் D