fbpx
Others

தேனிஆட்சியர் உயிர்பலி ஏற்ப்படும் முன் தடுப்பார்களா….?

தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் எடமால்தெரு- பழைய பாப்புராஜா தெருவில் தனியார் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமல் தெருவில் அமைந்துள்ள பேவர் பிளாக்கை அப்புறப் படுத்தி கழிவுநீர் செல்கின்ற குழாய்களை வேலை பார்க்கிறார்கள்.…. இந்த பாதையை தோண்டி வேலை பார்க்க நகராட்சி நிர்வாக பணியாளர்கள் இருக்கும் போது இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? இது சம்பந்தமாக சேர்மன் மற்றும் ஆணையாளருக்கு கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டால் இவர்கள் கைப்பேசியை எடுப்பது இல்லை……. முறையாக நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திய பின் நகராட்சி பணியாளர்கள் செய்யும் பணியை இவர்கள் எப்படி செய்யலாம்? இவற்றால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு…. இவற்றிற்கு நகராட்சி அதிகாரிகள் மெத்தனமே காரணம்….. இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் கழிவு நீர் அகற்றல் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…… எடுப்பார்களா ???………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close