fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!

Minister KP anbazhagan affected by corona

சென்னை:

உயர்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிப்படைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.

திமுக பிரமுகர் விபி கலைராஜனும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந் நிலையில் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில நாட்கள் முன்பு சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கேபி அன்பழகன் கலந்து கொண்டதாகவும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close