REஇந்தியா

கொரோனா வைரஸோடு நாம் வாழ்வோம்: கெஜ்ரிவால் என்ன சொல்ல வருகிறார்?

 

கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை இப்போதைக்கு  சாத்தியமில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 50  நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிராவிலும், அடுத்தது குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளது.

இந்நிலையில் இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது,

டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும்,

ஒட்டு மொத்த மாவட்டத்தையும் அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு பரிந்துரைந்துள்ளது.

கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது சாத்தியமே இல்லை.

டெல்லியை  திறந்துவிடும் நேரம் வந்துவிட்டது.

கொரோனா வைரஸுடன் வாழ நாம் எல்லோரும் தயாராக வேண்டும்.

இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close