பாடபுத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்

கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்தானதாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் ஊரடங்கானது மே-3 -ஆம் தேதிவரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பின்னர் சில முக்கிய செயல்பாட்டிற்க்கு மட்டும் கொரோனா ஊரடங்கில் இருந்து விளக்கு அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி பணிகளை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி விற்க்கும் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.















