fbpx
Others

ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார்…

வாட்ஸ் அப் செயலி மூலம் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார்   ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர் அருண் கடந்த 10.02.2025
அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவதுபூட்டுத் தாக்கு ஊராட்சியில் தலைவராக பணிபுரிந்து வருகிறேன் கடந்த 5.2.2025 புதன்கிழமை அன்று 9626222679,9787074899,8508204068 ஆகிய அலைபேசி எண்களில் வாட்ஸ் அப் செயலி மூலம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளனர் அதில் தமிழ்நாடு ஊராட்சி சட்ட விதிமுறைகளின் படி பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவரை 205 தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகளால் கடிதம் கொடுக்கப்பட்டது ஏன்?மேலும் பூட்டுத் தாக்கு ஊராட்சி மன்ற தலைவர் அருண் மக்களின் வரிப்பணத்தை கையாடல், ஊழல் செய்தல், டெண்டர் முறைகேடு, அப்ரூவல் வாங்குவதற்கு லஞ்சம் என பல புகார்கள் இவர் செய்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவு படி அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது ஆகையால் வீட்டு மனை அப்ரூவல் மற்ற எந்த அப்ரூவருக்கும் தலைவரிடம் சென்று ஏமாற வேண்டாம்வரிகள் கட்ட வேண்டாம் என்று உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்பி ஊராட்சி மன்றத்திற்கு கலங்கம் விளைவிக்கின்றனர் மேற்கண்ட இந்த அலைபேசி எண்களை பயன்படுத்தும் நபர்கள் யார்? யார்? யார்? என்றுகண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Related Articles

Back to top button
Close
Close