ஊத்துக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கட்டிடம் திறப்பு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :-ஊத்துக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கட்டிடம் திறப்பு விழா.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் அமைந்திருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் அங்கிருந்து மாற்றப்பட்டு திருவள்ளூர் சாலையில் விவேகானந்தா விஷன் பள்ளியின் அருகே புதிதாக திறக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் என்.ராஜசேகர் மற்றும் விவேகானந்தா விஷன் பள்ளியின் குழுமத் தலைவர் ரங்கநாதன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் சிதம்பரம் செட்டியார் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் ரா.ராஜேஷ் செயலாளர் அவந்திகாராஜேஷ் ஊத்துக்கோட்டை கிளை வங்கியின் மேலாளர் ராஜன் துணை மேலாளர் சாந்தனு குமார் பிரதான் நாகராணி மற்றும் வங்கியின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு வழக்கம்போல் வங்கி செயல்பட தொடங்கியது.