Others
இஸ்ரேல்-காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதல்.
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலிய நகரங்கள் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவினர். இதில் 1400 இஸ்ரேலியர்கள் மரணமடைந்தனர். அதனை தொடர்ந்து காசா நகரத்தையே இஸ்ரேல் போர் விமானங்கள் கட்டிட குவியல்களாக மாற்றி வருகின்றன. 19 நாட்களாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் மட்டும் இறந்தோரின் எண்ணிக்கை 6,500ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீது புதன்கிழமை இரவு ராணுவ டாங்க்குகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவுக்குள் நுழைந்து ஹமாஸின் நிலைகள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் 250 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.காஸாவுக்குள் நுழைந்து குண்டு வீசிய இஸ்ரேல் டாங்க்குகள் இஸ்ரேல் எல்லைக்குள் மீண்டும் திரும்பி வந்துவிட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஹமாஸின் ராக்கெட் குண்டு செலுத்தும் தளங்கள், சுரங்கப் பாதைகள், கட்டுப்பாடு அறைகள் மீது குண்டு வீசியதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது ஜெருசலேம் : இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெறும் நிலையில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை7 ஆயிரத்தைக் கடந்தது. அக்டோபர் 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் போரில் 7,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது