இலட்சிவாக்கம்- ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம்:ஊத்துக்கோட்டை அருகே 4ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த இலட்சிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வண்ண விளக்குகலால் அலங்கரிக்கப்பட்ட கொலு மொம்மைகளை பொது மக்கள் வழிபட்டனர்.கொலு பூஜையில் 50 க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புடவை ஆகியவற்றை வழங்கினார்.பின்னர் ஸ்ரீ சங்கர நாட்டியாலயா
ஷர்மிளா தேவராஜ் தலைமையில் பரதநாட்டியம், கோலாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நடன நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் நடனம் ஆடினர்.நடன நிகழ்ச்சில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் கிராமத்தின் சார்பாக சால்வை அணிவித்து மரியாதைசெய்தனர். .இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள்300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..