fbpx
Others

தமிழ்நாடு முழுவதும் 2026 எலக்‌ஷன் FEVER ஆரம்பித்துவிட் டது….?

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK DMDKதமிழக சட்டசபைத் தேர்தல் தேதி இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் இப்போது தமிழ்நாடு முழுவதும் எலக்‌ஷன் ஃபீவர் ஆரம்பித்துவிட் டது. அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு கூட்டணியை இறுதிசெய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகளுடன் மேலும் 10 அமைப்புகள் இணைய உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.முருகவேல் ராஜன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, ராஜ் கவுண்டர் என பட்டியல் நீள்கிறது. தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள திமுக அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக வுடன்பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளன. கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அளித்த இடங்களை மட்டுமே இந்த முறையும் அளிக்கதிமுகஎண்ணுகிறது.இன்னும்சொல்லப்போனால் தேமுதிக உள்ளிட்ட இன்னும் பல்வேறு அமைப்புகள் கூட்டணிக்குள் வருவதால் கடந்த முறை கொடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றை விட்டுக்கொடுக்குமாறு திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தரப்பில் எடுத்துச் சொல்லப்படுகிறதாம். இம்மாத இறுதிக்குள் கூட்டணிகட்சிகளுடனான பேச்சுவார்த்தையை முடித்து எந்தெந்த தொகுதிகளை எந்தெந்த கட்சிகளுக்கு கொடுப்பது என்பன உள்ளிட்ட எல்லா பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். காங்கிரஸ் தரப்புடனும் சுமூக போக்கை கடைபிடிக்க விரும்பும் திமுக தலைமை முடிந்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை பக்குவமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த கால தேர்தல்களை போல் இந்த தேர்தல் இல்லை என்பதால் சிறிய சிறிய அமைப்புகளுக்கு கூட அந்தந்த பகுதி அமைச்சர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு ஆதரவு குரலை கேட்டுப்பெறும் முயற்சியில் திமுக இறங்கியிருக்கிறது. இதனால் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close