fbpx
Others

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று டெல்லி திரும்பினார்.

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு சென்ற பிரதரமர் மோடி தற்போது டெல்லிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி ஓமன் நாட்டுக்கு சென்று அங்கு இருநாடுகளின் வர்த்தகம் பற்றி விவாதித்தார்.இந்நிலையில் தான் ஓமனில் பிரதமர் மோடி தனது காதில் கம்மல் அணிந்திருந்ததாக கூறி வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதாவது எத்தியோப்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடி ஓமன் தலைநகர் மஸ்கட் விமானத்தில் தரையிறங்கினார். ஓமன் துணை பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத், பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த வேளையில் பிரதமர் மோடியின் காதில் கம்மல் போன்று ஒன்று இருந்தது. இதுதொடர்பான வீடியோpm modi ethiopia award இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவ தொடங்கியது. பிரதமர் மோடி தனது உடை அலங்காரம் தொடர்பாக அவ்வப்போது டிரெண்டாவது வழக்கம். இந்நிலையில் தான் பிரதமர் மோடி காதில் கம்மல் அணிந்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பரப்ப தொடங்கினர். இதுபற்றி விசாரித்தபோது பிரதமர் மோடியின் காதில் இருந்தது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது ஓமன் தலைநகர் மஸ்கட் விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியபோதுஅவரது காதில் கம்மல் எதுவும் அணியவில்லையாம். மாறாக பிரதமர் மோடியின் காதில் கம்மல் போல் காட்சியளித்தது மொழிப்பெயர்ப்பு சாதனம் என்பது உறுதி செய்ப்பட்டுள்ளது. பொதுவாக வெளிநாட்டு பயணங்களின்போது சில தலைவர்கள் உள்ளூர் மொழிகளில் பேசுவார்கள். அது பிரதமர் மோடிக்கு தெரியாது. இதனால் மொழிப்பெயர்ப்பு கருவிகள் பயன்படுத்தப்படும். ஓமன் நாட்டின் அலுவல் மொழியாக அரபு உள்ளது. தலைவர்கள் பெரும்பாலும் அரபு மொழிகளில் தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதனால் பிரதமர் மோடி நேரடி மொழிப்பெயர்ப்புக்காக அந்த சாதனத்தை தனது காதில் அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த சாதனம் தான் கம்மல் போல் பார்வையாளர்களின் கண்களுக்கு தெரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close